சாஸ்திரம் யாருக்கு துன்பம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

Bharathi theerthar
Bharathi theerthar
Bharathi theerthar

இம்மூன்றுவிதமான வாஸனைகளான லோக வாஸனை, சாஸ்திர வாஸனை மற்றும் தேஹ வாஸனை ஆகியவை பிறப்பு இறப்புச் சக்கரமாகிய சிறையில் உள்ள ஒரு மனிதனைக் கட்டியுள்ள உறுதியான இரும்புச் சங்கிலிகள் போலுள்ளன.

இந்தச் சங்கிலிகள் நம்மிடமிருந்து விலகி விட்டால்தான் நாம் சிறையிலிருந்து விடுபட முடியும். ஆகவே, எது வரையில் இத்தகைய வாஸனைகளை வளர்த்துக்கொள்கிறோமோ அது வரையில் நாம் பந்தத்தைத்தான் வளர்த்துக் கொள்கிறோம்.

பந்தத்திலிருந்து விடுதலையை விரும்பினால், நாம் இந்த வாஸனைகளிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு குருவின் கருணையும் இறைவனது அருளும் தேவை.

சாஸ்திர வாஸனையைப் பற்றி கூறும் போது வித்யாரண்யர்,
குருகருணாரஹிதஸ்ய சாஸ்த்ரவ்யஸனம் வ்யஸனமேவ பவதி
என்றார்.

“குருவின் கருணை இல்லாதவனுக்கு சாஸ்த்ர வ்யஸனம் துன்பமாகத்தான் இருக்கும்” என்று கூறுகிறார். ஏனெனில், ஆத்ம ஞானம் வராமல் சாஸ்திரம் மட்டும் கற்றிருந்தால் அது உபயோகமில்லை.

சாஸ்திரம் யாருக்கு துன்பம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply