திருமாங்கல்யம்: ஒன்பது இழையின் மகத்துவம்!

ஆன்மிக கட்டுரைகள்

marriage 2 1
marriage 2 1
marriage 2 1

தாலி சரடில் உள்ள ஒன்பது இழைகளும்!அவற்றில் உள்ள ஒன்பது தத்துவங்களும்.

இந்த தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல் இல்லாமல் ஒரு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனித நூல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தோற்றம் களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவை பொருத்த வரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும் வட இந்தியாவில் மாங்கல்சூத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தாலி என்பது மரியாதை, அன்பு, காதல் மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும் பெண்ணும் இணையும் திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அடையாளமாக உள்ளது. இது இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.

thirumankalyam
thirumankalyam

புராண கால வரலாற்று படி பார்த்தால் இந்த தாலி என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சியப்ப சிவசாரியாரின் கந்த புராணத்தில் இது இடம் பெற்று உள்ளது. அதற்கு அடுத்த படி 12 ஆம் நூற்றாண்டில் கம்பர் மற்றும் சேக்கிழார் போன்ற வர்கள் பெரிய புராணத்தில் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதன் படி தான் தாலி என்பது இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தாலியின் வடிவமைப்பு

பொதுவாக தாலி வெவ்வேறு வடிவமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. கடவுள் சிவபெருமானின் திருவுருவம் என்றால் 3 கிடைமட்ட கோடுகளை கொண்டும் கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சாதி மத வேறுபாடுகளின் படி அவர்கள் தங்கள் திருமணத்தின் போது வெவ்வேறு விதமான தாலிகளை வடிவமைத்து கொள்கின்றனர்.

mankalyam
mankalyam

அறிவியல் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலு‌ம் பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும் படி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்துக்களிடையே மஞ்சள் நிறம் என்றாலே அது புனிதமான நிறம் என்றே கருத்து ஆழமாக பதிந்துள்ளது. திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள்

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

thirumankalyam1
thirumankalyam1

தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.

marriage 1 2
marriage 1 2

மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
மேன்மை & தொண்டு
தன்னடக்கம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
மேன்மை
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு (தாலி சரடு) அணிவிக்கப்படுகிறது.

இதற்கு பஞ்ச பூதங்கள் சாட்சியாக வைத்து அணியப்படுகிறது. மேலும், மணமகளுக்கு மாங்கல்யம் மணமகன் கட்டும்போது…

“மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா! கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!!

என்ற மந்திரம் சொல்லப்படுகிறது. இதன் பொருளைத் தெரிந்து கொண்டால் மணவாழ்வின் மகத்துவம்
புரியும்.”மங்கலகரமானவளே! உன்னோடு
இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த
வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்ய சரடை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் மனைவியாக, என்னுடைய சுகதுக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன்
நூறாண்டு காலம் வாழ்க!” என்பதே பொருள். இதன் கருத்தை உணர்ந்து மணமகனும் தாலிகட்டினால் மணவாழ்வில் எல்லா நாளும் இனிய நாளே.

திருமாங்கல்யம்: ஒன்பது இழையின் மகத்துவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply