முப்போதும் ராமநாமம்! மன அமைதி நிச்சயம்!

ஆன்மிக கட்டுரைகள்

00" height="225" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/06/e0aeaee0af81e0aeaae0af8de0aeaae0af8be0aea4e0af81e0aeaee0af8d-e0aeb0e0aebee0aeaee0aea8e0aebee0aeaee0aeaee0af8d-e0aeaee0aea9-e0ae85-1.jpg" class="attachment-medium size-medium wp-post-image" alt="ramar 1" style="margin-bottom: 15px;" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/06/e0aeaee0af81e0aeaae0af8de0aeaae0af8be0aea4e0af81e0aeaee0af8d-e0aeb0e0aebee0aeaee0aea8e0aebee0aeaee0aeaee0af8d-e0aeaee0aea9-e0ae85.jpg 600w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/06/e0aeaee0af81e0aeaae0af8de0aeaae0af8be0aea4e0af81e0aeaee0af8d-e0aeb0e0aebee0aeaee0aea8e0aebee0aeaee0aeaee0af8d-e0aeaee0aea9-e0ae85-3.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/06/e0aeaee0af81e0aeaae0af8de0aeaae0af8be0aea4e0af81e0aeaee0af8d-e0aeb0e0aebee0aeaee0aea8e0aebee0aeaee0aeaee0af8d-e0aeaee0aea9-e0ae85-4.jpg 265w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="முப்போதும் ராமநாமம்! மன அமைதி நிச்சயம்! 5">
ramar 1
ramar 1

1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது;

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது; முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்; அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;

இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்; அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!

அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்; உணவும் கிடைக்கும்; இலவசமாக! தனியாக செல்லலாம்; தம்பதியாகச் செல்லலாம்; நண்பர்களாகச் செல்லலாம்;

Ananda asiramam
Ananda asiramam

ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;
இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்;

1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;

இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக, நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்;

சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்; அதுவும் சரியாகிவிடும்; ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்;

Ananda asiramam kerala
Ananda asiramam kerala

சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்;கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;

இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராமதாஸரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர்,மகாராஷ்டிர மாநிலத்தில் தேசபக்தியைத் தூண்டிய வீரசிவாஜியின் குரு ஆவார்) இல்லத்துறவியாக இருந்த இவர்,இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்;

ணராம நாம கீர்த்தனையை தனது தந்தையிடம் இருந்து பெற்றவர்; தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர்;

இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி;

இவருடைய சீடர்தான் விசிறிச்சாமியார் என்று அழைக்கப்படும் யோகிராம்சுரத்குமார் ஆவார்;

அந்த ராம நாம கீர்த்தனை:

ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;
மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது; உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;

ஆனந்த ஆஸ்ரமம், காஞ்சன்கோடு, கேரளா;

முப்போதும் ராமநாமம்! மன அமைதி நிச்சயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply