e0af8de0ae95e0aeb3e0af88-e0aeaee0aea4e0aebfe0aeaae0af8de0aeaae0af8be0ae9fe0af81-e0aea8e0ae9fe0aea4e0af8de0aea4e0af81.jpg" style="display: block; margin: 1em auto">
பெண்களை மதிப்போடு நடத்துங்கள்.
நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யாரையோ அனுதினமும் வணங்குகிறார். யாராக இருக்கும் வியப்பாக இருக்கிறதா?
கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.
ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.
கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:
நான் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை!!
உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை இந்து மதத்தில் மட்டும் உண்டு. சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும்.
தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர்: உண்மை, வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்). இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனையும் நினையாது கணவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர்களைத்தான் ஸ்ரீ கிருஷ்ணன் வணங்குகிறான்.
இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப் பிரயோகிக்க மாட்டார்கள்.
அதற்கு உதாரணமும் சொல்கிறார் பரந்தாமன்…..அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் கெஞ்சுகிறான்: தாயே உங்களைக் காணாமல் ஸ்ரீ ராமர் தவிக்கிறார் . என் தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள்.
என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக்கும், ஆதலால் நான் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.
எனக்கும் தெரியும் ராவணன் வதம் என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்றாள் சீதை.
பெண்களை மதிப்போடு நடத்துங்கள். பெண்களிடம் உள்ள மகத்தான ஆற்றலை அவர்கள் அரிதே பயன்படுத்துவர் என முடித்தார் ஸ்ரீ கிருஷ்ணன்
பெண்களை மதிப்போடு நடத்துங்கள்! கண்ணனே வணங்கும் காரிகையர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.