அடியாரை அச்சுறுத்திய அரசன்! புலியை துரத்த விட்ட ஆண்டவன்!

ஆன்மிக கட்டுரைகள்

panduranga
panduranga

பண்டரிபுரத்தின் அருகே உள்ள பாரளி என்ற சிற்றூரில் வசித்து வந்தார் ஜகன் மித்திரர். எப்போதும் பக்தியிலேயே திளைத்திருப்பவரிடம், ‘பக்தி என்றால் என்ன?,

தெய்வத்தை நேரில் காட்ட முடியுமா?’ என்று வம்பு செய்பவர்கள் ஏராளம்.
அப்படிப்பட்டவர்களிடம், ‘பக்தி இதயத்தில் உண்டாகும் ஊற்று. அது பாறைகளில் கிடைக்காது.

தொண்டினால்தான் பரந்தாமன் அருள் கிடைக்கும்’ என்று கூறி ஒதுங்கி விடுவார் ஜகன் மித்திரர்.
ஜகன்மித்தரரிடம் இவ்வாறு பக்தியை பரிகாசம் செய்த சிலர்தான், இந்த படுபாதக செயலை செய்து விட்டிருந்தனர்.

வீடு எரிவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
அவர்களைப் பார்த்ததும், வீட்டை கொளுத்தியவர்கள் தப்பி ஓடினர்.

அப்போது அவர்களில் ஒருவன், ‘உன் பாண்டுரங்கன் உன்னை வந்து காப்பாற்றுகிறானா என்று பார்க்கிறோம்?’ என்று கூறியபடி ஓடினான்.

வீட்டுக்குள் இருந்த ஜகன்மித்திரர், என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப் போனார்.
பின்னர் தனது மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பூஜை அறையில் போய் அமர்ந்தார்.

pakthan
pakthan

அந்த அறையில், பாண்டுரங்கன் புன்னகை தவழ சிலையாக நின்று கொண்டிருந்தான்.
அவனிடம், ‘இறைவா! நாங்கள் பல காலம் உன்னைப் பாட வேண்டும் என்று நீ நினைத்தால் எங்களைக் காப்பாற்று’ என்று மெய்யுருக வேண்டிக்கொண்டார்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் பற்றி எரிந்த தீயை அணைக்க பல முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால் வீட்டை முழுவதுமாக விழுங்கியதும்தான் தீ அமைதிகொண்டது.

வீட்டின் அருகே நெருங்க முடியாத அளவுக்கு அனல்காற்று வீசியது.
ஆனால் புகை மண்டலத்துக்குள் ஜகன்மித்திரரும், அவரது குடும்பத்தாரும் எந்த ஒரு காயமும் இன்றி, பாண்டுரங்கனை நினைத்து பஜனை செய்து கொண்டிருந்தனர்.

அவரது பக்தியின் பெருமையைக் கண்டு ஊர் மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போய் நின்றனர்.

அவரது பக்தியும், தொண்டும் அந்நாட்டு மன்னனுக்கு தெரியவந்தது.
அவர் ஜகன்மித்திரருக்கு புதிய வீடு கட்டித்தந்து, ஒரு கிராமத்தையும் எழுதிவைத்தான்.

ஜகன்மித்திரர் மறுத்தார், அரசே! பணம் விஷம் போன்றது, அது பேராசை விதையை மனதில் தூவிவிடும், அது பக்திக்கும் தடைக்கல்’ என்றார்.

மன்னர் அவரிடம், தாங்கள் அந்தப் பொருளால் விருந்தோம்பலையும், பாண்டுரங்கன் சேவையையும் செய்து கொண்டிருந்தால் போதும் உங்களைப் போன்ற பக்திமான்களால்தான் நாடு செழிக்கும்’ என்று மறுபடியும் வற்புறுத்தியதால் ஜகன்மித்திரர் ஒப்புக்கொண்டார்.

tiger 1
tiger 1

சில காலம் சென்ற நிலையில், அந்த நாட்டின் மீது வேறொரு மன்னன் படையெடுத்து வெற்றி கொண்டான்.

அவன் ஆட்சிக்கு வந்ததும், ஜகன்மித்திரருக்கு ஒரு கிராமம் எழுதி வைக்கப்பட்டிருப்பது பற்றி விசாரித்தான். ஜகன்மித்திரர் மீது பொறாமை கொண்டவர்கள், அவர் சோம்பேறியாக சதா பஜனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் மற்ற வேலை செய்யாத பண்டாரங்களுக்கு சோறு போடுவதற்காக, இந்த நிலம் வழங்கப்பட்டிருக்கிறது’ என்று திரித்துக் கூறினர்.

மன்னன், ஜகன்மித்திரரை அழைத்தான்… இந்த நாடு இப்போது எனக்கு சொந்தம், உன்னை நெருப்பு கூட சுட முடியவில்லை என்று கேள்வியுற்றேன்…

என்னுடைய குலதெய்வ பூஜைக்கு சூரிய அஸ்தமனத்திற்குள் ஒரு புலி தேவை…
நீதான் அதைக் கொண்டு வர வேண்டும். உன்னால் முடியாவிட்டால் நீ இதுநாள் வரை செய்ததெல்லாம் வேஷம்…

அதற்கு தகுந்த தண்டனையுடன், உனக்கு வழங்கப்பட்ட கிராமமும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தான்..
தண்டனைக்கு பயந்தவர் அல்ல ஜகன்மித்திரர்..

ஆனால் நிலம் பறிமுதல் செய்யப்பட்டால் அதை நம்பி பிழைக்கும் ஏழைகள் பாதிக்கப்படுவார்களே என்று எண்ணி கலங்கினார்..

பின்னர் பாண்டுரங்கன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டு, மன்னனிடம் விடைபெற்று காட்டை நோக்கிச் சென்றார்…

அங்கு ஓரிடத்தில் அமர்ந்தவர், பாண்டுரங்கனை நினைத்து பஜனைப் பாடல்களைப் பாடத் தொடங்கிவிட்டார்.
சிறிது நேரத்தில் திடீரென புலியின் உறுமல் கேட்டு கண் விழித்தார்.

எதிரே பிரம்மாண்ட உருவில் புலி ஒன்று அங்கும், இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது.

பின்னர் அது வாய் திறந்து, ‘அன்பனே! நடந்ததை எல்லாம் நான் அறிவேன்… புறப்படலாமா!’ என்றது…வந்தது பாண்டுரங்கன் என்பதை உணர்ந்து கொண்ட ஜகன்மித்திரர், நெடுஞ்சாண்கிடையாக புலியின் பாதத்தில் விழுந்தார்.

இதற்குள் அரண்மனைக்கு செய்தி கிடைத்தது.. காவல் காத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தம்தம் வீடுகளுக்கு ஓடி தாளிட்டுக் கொண்டனர். ..

மன்னனும் கூட இந்தச் செய்தியை அறிந்து புலியால் ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி மனைவி, குழந்தைகளுடன் அந்தப்புரம் சென்று கதவை சாத்திக்கொண்டான்… அரண்மனையின் அனைத்துப் பக்க கதவுகளும் அடைக்கப்பட்டன..

அரண்மனைக்கு சென்ற ஜகன்மித்திரர் கதவுகள் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு வியந்தார்.. ஆனால் புலி சட்டென பாய்ந்து கதவில் முட்டியது.. கதவுகள் அனைத்தும் திறந்து கொண்டன..

அரண்மனை முழுவதும் தேடியும் மன்னனைக் காணவில்லை…
இறுதியாக அந்தப்புரத்திற்குள் புலியுடன் நுழைந்தார் ஜகன்மித்திரர்…

புலியின் உறுமலைக் கேட்டு மன்னனின் குழந்தைகள் பயத்தில் அலறினர், ‘ஐயோ! இப்போது என்ன செய்வது?’ என்று அரசன் புலம்பினான், அரசியோ, ‘உண்மையான பக்தர்களை தண்டிக்க நினைத்தால் இப்படித்தான் துன்பமான பலன் கிடைக்கும்..

ஜகன்மித்திரரிடம் மன்னிப்பு கேட்பதைத் தவிர தப்பிப்பதற்கான மார்க்கம் வேறு ஒன்றும் இல்லை என்றாள்.

அரசனும், அரசியும் ஜகன்மித்திரரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.. மறுநிமிடமே புலி மறைந்தது..

அடியாரை அச்சுறுத்திய அரசன்! புலியை துரத்த விட்ட ஆண்டவன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply