கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளைத் தொட்டு நாட்டியமாடியது அதர்மம் அல்லவா?

ஆன்மிக கட்டுரைகள்

e0aea9e0af8d-e0ae95e0af8be0aeaae0aebfe0ae95e0aebe-e0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0af80e0ae95.jpg" style="display: block; margin: 1em auto">

gopika krishna
gopika krishna

சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவன்

ஶ்ரீ பரீக்ஷித் உவாச –
ஸம்ஸ்தாபனாய தர்மஸ்ய ப்ரசமாயேதரஸ்ய ச
அவதீர்ண: ஹி பகவான் அம்சேன ஜகதீச்வர:

ஸ: கதம் தர்மஸேதூநாம் வக்தா கர்தாபிரக்ஷிதா
ப்ரதீபம் ஆசரத் ப்ரஹமன் பரதாராபிமர்சனம்

(பரீக்ஷித் மகாராஜா சொன்னது –
ஓ, பிராமணரே! படைப்புக்கெல்லாம் அதிபதியாகிய பகவான், தனது அம்சமாகிய பலராமனுடன் அவதாரம் செய்தது, இந்த பூமியில் தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை வேரறுப்பதற்காகவும்தானே? தார்மிக நெறிகளை உபதேசித்தவனும் அவனே, அவற்றை செயல்படுத்துபவனும் அவனே, அவற்றைக் காத்து நிற்பவனும் அவனே. பிறகு எப்படி அவன் (ராசலீலையின் போது) தார்மிக நெறிகளை மீறிப் பிறரது மனைவியரைத் தீண்டினான்?)

ஆப்தகாம: யதுபதி: க்ருதவான்வை ஜுகுப்ஸிதம்
கிம் அபிப்ராய ஏதன்ன: சம்சயம் சிந்தி ஸுவ்ரத்

(யதுகுல நாயகன் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் அப்பாற்பட்டவன். அவன் (மேலோரால்) இழிவாகக் கருதப்படும் செய்கையை மேற்கொண்டதன் காரணம்தான் என்ன? ஓ, தபஸ்வியே! எனது இந்த ஐயத்தைப் போக்கியருள வேண்டும்.)

ஶ்ரீ சுக உவாச –
தர்மவ்யதிக்ரமோ த்ருஷ்ட ஈச்வராணாம் ச ஸாஹஸம்
தேஜீயஸாம் ந தோஷாய வஹ்னே ஸர்வபுஜோ யதா

(ஶ்ரீ சுகப்ரம்மம் சொன்னது –

அக்னி அனைத்தையும் பஸ்மமாக்கி விடுகிறது. ஈசுவரத்தன்மை கொண்டவர்களும் அக்னியைப் போன்றவர்கள். நமது பார்வையில் தர்மக் குறைவாகத் தெரியும் செயல்களால் எந்த விதத்திலும் அவர்கள் பாதிப்படைவதில்லை.)

நேதத் ஸமாசரேஜ்ஜாது மனஸாபி ஹ்யநீச்வர:
வினச்யத்யாசரன் மௌட்யாத்யதாருத்ரோ(அ)ப்திஜம் விஷம்

(ஈசுவரத்தன்மை இல்லாதோர் மனதளவில்கூட இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது. சாமானியர்கள் யாராவது முட்டாள்தனத்தால் இத்தகைய செயல்களைக் கைக்கொண்டால் அவர்கள் அடியோடு அழிந்து போவார்கள். ருத்ரன் அல்லாமல் மற்றவர்கள் பாற்கடலின் விஷத்தைக் குடிக்க முயற்சித்தால் அழிந்து போய்விடுவார்கள், அல்லவா?)

ஈச்வராணாம் வச: ஸத்யம் தத ஏவ ஆசரிதம் க்வசித்
தேஷாம் யத் ஸ்வவசோயுக்தம் புத்திமாந்ஸ்தத் ஸம ஆசரேத்

(ஈசுவரத்தன்மை உடையவர்களின் வாக்கு சத்தியத்தன்மை கொண்டது. அவர்களது செயல்களும் அப்படியே. அவர்களது செயல்கள் அவர்களது வாக்குடன் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை அறிவின் மூலம் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.)

குசலசரிதேன ஈஷாமஹி ஸ்வார்த: ந வித்யதே
விபர்யயேண வானர்த: நிரஹங்காரிணாம் ப்ரபோ

(அரசனே! அவர்கள் அகங்காரத்துக்கு அப்பாற்பட்டவர்கள். தாங்கள் செய்யும் அறச்செயல்களால் அவர்கள் எந்தவொரு நற்பலனையும் அனுபவிப்பதில்லை. அதேபோல, அறத்துக்கு மாறான செயல்களால் எந்தவொரு கெடுதியையும் அவர்கள் அனுபவிப்பதில்லை.)

கிம் உத அகில ஸத்த்வானாம் திர்யங்மர்த்யதிவௌகஸாம்
ஈசிதுஸ்சேதவ்யானாம் குசல அகுசல அன்வய:

[(ஈசுவரனின் அதிகாரிகளே இப்படி மேம்பட்ட நிலையில் இருக்கும்போது) ஈசுவரனைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? (கீழ் உலகில் உள்ள மரணிக்கும் தன்மை உடைய) விலங்குகளையும், மனிதர்களையும், (மேல் உலகில் உள்ள மரணத்துக்கு அப்பாற்பட்ட) தேவர்களையும் படைத்தவன் அவன். அவனே சர்வேசுவரன். (மாயாவலையில் சிக்கியுள்ள) படைக்கப்பட்ட ஜீவர்களுக்கு (மட்டுமே) உரிய அறச்செயல்கள், மறச்செயல்கள் முதலானவற்றின் விளைவுகள் அவனை எவ்வாறு தீண்ட முடியும்?)

(அவன் படைப்புக்கு அப்பாற்பட்டவன். படைப்பின் இயல்புகளான கர்மவினைகளும், அவற்றால் விளையும் புண்ணிய பாவங்களும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, படைப்பின் இயல்புகளைக் கொண்டு அவனை எடைபோடக் கூடாது என்பது இந்த சுலோகத்தின் கருத்து.)]

யத் பாதபங்கஜ பராகநிஷேவ த்ருப்தா யோக ப்ரபாவ விதுத அகில கர்ம பந்தா:
ஸ்வைரம் சரந்தி முனயோ(அ)பி ந நஹ்யமானா: தஸ்ய இச்சயாத் தவபுஷ: குத ஏவ பந்த:

(எந்த (சர்வேஸ்வரனின்) திருவடித் தாமரைகளின் அடிப்பொடியைப் பணிந்து கைங்கரியம் பண்ணுவதால் (பேரின்பத்தை அடைந்து) திருப்தியடைய முடியுமோ, (எந்த சர்வேஸ்வரனுடன்) யோகத்தால் தங்களை இணைத்துக் கொண்ட முனிவர்கள் (தங்களது முந்தைய) கர்ம பந்தங்களில் இருந்து விடுபடுவதுடன், (இனிவரும் காலங்களில்) பந்தங்களில் சிக்காமல் சர்வ சுதந்திரமாகச் செயல்பட முடியுமோ, அவன் (அத்தகைய சர்வேஸ்வரன்) தனது சங்கல்பத்தினால் எடுக்கும் திவ்ய சரீரத்தை (அவதார புருஷனை) எத்தகைய கர்மத்தால் தளைப்படுத்த முடியும்?)

கோபீனாம் தத் பதீனாம் ச ஸர்வேஷாம் ஏவ தேஹீனாம்
யோ(அ)ந்த: சரதி ஸோ(அ)த்யக்ஷ: க்ரீடனேன இஹ தேஹபாக்

(கோபிகைகளுக்குள்ளும் அவர்களது கணவர்களுக்குள்ளும் மட்டுமின்றி, உடல் தரித்த சகல ஜீவர்களுக்குள்ளும் (அந்தர்யாமியாக) வீற்றிருந்து (புலன் இன்பங்களையோ, கர்ம பலன்களையோ அனுபவிக்காமல்) வெறும் பார்வையாளனாக மட்டும் திகழ்பவன் எவனோ, அவனே தனது லீலைக்காக, சரீரம் தாங்கியவனாக, இந்தப் புவியில் அவதரிக்கிறான்.)

அனுக்ரஹாய பக்தானாம் மானுஷம் தேஹமாஸ்தித:
பஜதே தாத்ருஷீ: க்ரீடா யா: ச்ருத்வா தத்பர: பவேத்

(பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் பொருட்டு அவன் மனித வடிவத்தில் அவதரிக்கும் போது இத்தகைய லீலைகளில் ஈடுபடுகிறான். இவற்றைப் பற்றிக் கேட்பவர்கள் அவன் மீது பக்தியில் திளைக்கிறார்கள்.)

விக்ரீடிதம் வ்ரஜவதூபி: இதம் ச விஷ்ணோ:
சிரத்தாவிந்தோ(அ)நுச்ருணுயாதத வர்ணயேத் ய:
பக்திம் பராம் பகவதி ப்ரதிலப்ய காமம்
ஹ்ருத்ரோகமாச்வபாஹினோத்யசிரேண தீர:

[(அதுபோலவே) பிருந்தாவனத்தில் கோபிகா ஸ்திரீகளுடன் பகவான் நிகழ்த்திய (ராசலீலை எனப்படும் அதி அற்புதமான) இந்த லீலையைச் சொல்பவரும் கேட்பவரும், பகவான் விஷ்ணுவின் மீது மாறாக பக்தி கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவர்கள் காமம் என்னும் பெரு நோய் நீங்கப் பெற்றவர்களாய் உள்ளத் தூய்மை அடைவார்கள்.]– ஶ்ரீமத் பாகவதம்

  • வேதா டி.ஸ்ரீதரன்

கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளைத் தொட்டு நாட்டியமாடியது அதர்மம் அல்லவா? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply