ஒரு பொருள் முன்பு இருந்ததில்லை, என்ற வாக்கியத்திற்கும் இடமாகக்கூடாது, இப்போது இல்லை என்ற வாக்கியத்திற்கும் அது இடமாகக்கூடாது. இனி இருக்கப் போவதில்லை என்ற வாக்கியத்திற்கும் இடமாகக் கூடாது.
உலகில் இது போன்ற தகுதிகளுள்ள பொருட்களை நாம் பார்க்க முடியாது. உலகத்தில் நாம் பார்த்த பொருட்கள் பல இப்போது நம்மிடல் இல்லை.
ஆகவே முக்காலங்களிலும் இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு எந்தப் பொருள் இடமாகாதோ அந்தப் பொருள்தான் ஸத்யம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது
சைதன்யம் ‘முன்பு இருந்ததில்லை’ என்று கிடையாது. ‘இப்போது இல்லை’ என்பதும் கிடையாது. நாளை இருக்கப்போவதில்லை’ என்றும் கிடையாது ஆகவே தான்
“ த்ரிகாலாபாத்யத்வம் ஸத்யத்வம்
என்று கூறப்பட்டுள்ளது. இன்னொரு பொருளை எதிர்பார்த்து இந்த லக்ஷணம் இல்லை.
எக்காலமும் சத்யம்.. ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.