e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
நாம் எந்த உயர்ந்த லோகத்திற்குச் சென்றாலும்
க்ஷீணேபுண்யே மர்த்யலோகம் விசந்தி
என்று சொன்னதுபோல் புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மனிதர்களின் உலகிற்குத்தான் செல்ல வேண்டிவரும். ஆகவே நாம் நிலையற்ற பொருட்களிலிருந்து விடுபட்டு நிலையான பொருளை அடைவதற்கு பகவான் சக்தி கொடுத்திருக்கிறான்.
இதற்கு மனிதப் பிறவி என்பது மிகவும் ஏற்றதாகும். நாம் மனிதப் பிறவியை வீணடிக்கக் கூடாது. இது சாஸ்திரங்களுடைய முடிவு.
ஒருவன் தத்துவத்தை அறிவதினால் அவன் வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் விலகி அவன் ப்ரஹ்மமாகவே ஆகிவிடுகிறான் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே நாம் சிறிதளவாவது வேதாந்த விசாரம் செய்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற முயன்றோமென்றால், அதிலே நாம் சிரத்தை வைத்துக் கொண்டால்,
இந்த ஜன்மாவில் நமக்கு மோக்ஷம் கிடைக்காவிட்டாலும் அந்த ஸம்ஸ்காரங்களினால் (வாஸனைகளினால்) அடுத்த ஜன்மாவில் நமக்கு “ஆத்ம ஸாக்ஷாத்காரம் “ கிடைக்கலாம். ஆகவே நாம் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். இந்த ஞானத்தை உங்களுக்கு பகவான் அளிக்கட்டும். என் ஆச்சார்யாள் ஆசிர்வதித்து அருளுரை கூறுகிறார்கள்.
மகத்தான பிறவியை வீணடிக்க லாமா? ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.