அன்றாட ஆன்மிக வாழ்க்கை நடைமுறையில் எழும் ஐயங்கள்!
17" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/08/clock.jpg" border="0" style="float: left; margin: 5px;" width="150" height="112" />
சனாதன தர்மத்தில் நாம் பின்பற்றி வரும் நடைமுறைகளில், அன்றாட வாழ்வில் நமக்கு எழும் ஐயங்களுக்கான விளக்கங்கள் பெற்றுத்தரும் பகுதி! உங்கள் ஐயங்களை இங்கே பதிவு செய்யுங்கள்!
உங்கள் கேள்விகளை பதிவு செய்ய… இங்கே க்ளிக் செய்யவும். என் கேள்விக்கான பதிலைத் தாருங்கள்!
கேள்விக்கு சரியான பதில் தெரிந்த வாசகர்கள் கீழே உள்ள comment பிரிவில் உங்கள் பதிலை உள்ளிடலாம். நன்றி!
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் என்ன?
– டிசைன்ஸ்பார்க் வெங்கடேஷ், திருவல்லிக்கேணி
திருமண நிகழ்வில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் போது, ஒரு மந்திரத்தைச் சொல்கிறான். இது பாரம்பரிய வேத நூல்களிலோ அல்லது உபநிடதங்களிலோ இல்லை. பின்னாளில் மாங்கல்யம் சூட்டும் வழக்கம் நம் சமுதாயத்தில் வந்த பிறகு தோன்றிய மங்கள சூத்ரமாக இருக்கிறது. இதன் பொருள்…
மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேது நா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம்ஜீவ சரதஸ் சதம்!!
– என்பது இந்த மந்திரம்.
இதன் பொருள்: மங்கள வடிவாகத் திகழும் பெண்ணே! உன்னுடன் துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு நன்றாக அமைய வேண்டும்; என்னுடைய ஜீவனுக்கு ஹிதத்தைத் தர வேண்டும் என்று உறுதிகூறி, இந்த திருமாங்கல்யக் கயிறை உன் கழுத்தில் அணிவிக்கின்றேன். என் இல்லறத் துணையாக, அனைத்து சுகதுக்கங்களிலும் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!