நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ?

செய்திகள்

கடந்த சனிக்கிழமை மூன்று பஸ்களை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த பஸ்களில் ஒன்றில் பயணம் செய்த பக்தர்களில் நானும் ஒருவன். நவதிருப்பதி தலங்களை ஒருசேர தரிசிக்கும் வாய்ப்பை போக்குவரத்துக் கழகம் பக்தர்களுக்கு ஓரளவு நியாயமான (ரூ.250) கட்டணத்தில் அளிக்கிறது. நவதிருப்பதி தரிசனத்துடன் மேலும் 3 தலங்களையும் சேர்த்து தரிசிக்கவும் ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத் தக்கதே.

வழக்கமாக நவதிருப்பதி பயணத்தின் போது திருக்குறுங்குடி இடம்பெற்றிருக்கும். பயணத்தின் கடைசியாக திருக்குறுங்குடியில் மலைநம்பி கோயிலை தவிர்த்து மற்ற நான்கு நம்பி சுவாமிகளை தரிசித்து ஜீயர் சுவாமிகளின் ஆசியையும் பெற்றுவரும் அனுபவமே அலாதி. ஆனால் இந்த முறை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பயணத் திட்டத்தில் திருக்குறுங்குடியை ஏனோ விட்டுவிட்டது. நான் மட்டுமல்ல பஸ்ஸில் வந்த பெரும்பாலான பயணிகளும் பயணத்திட்டத்தில் திருக்குறுங்குடி இடம்பெற வேண்டும் என்றுதான் வலியுறுத்தினர். டீசல் சிக்கனம் காரணமா

யிருந்தாலும் கூட அடுத்து வரும் பயணத்திட்டத்தில் போக்குவரத்துக்கழகம் பக்தர்களின் கோரிக்கையை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பஸ் பயணத்தின் போது பயணிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் சித்திரையை விடவும் கொளுத்தும் வெயிலுக்கு “யானைப் பசிக்கு சோளப் பொரியாக’ உள்ளது.ஸ்பான்சர் மூலமாவது பக்தர்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்க போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்தால் புண்ணியமாய் இருக்கும்.

கோபாலகிருஷ்ணன், வண்ணார்பேட்டை

Leave a Reply