சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர் : பிரம்மோற்ஸவம்

செய்திகள்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர்

திருப்பதி,மே 22: திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது.முதல் நாள் மதியம் 2 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி உற்சவமூர்த்திகளின் வீதி உலா நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசித்தனர்.

Leave a Reply