இஸ்கான் கோயிலில் நரசிம்ம அவதார தின விழா

செய்திகள்

ஸ்ரீநரசிம்மர் அவதரித்த தினத்தையொட்டி கோயிலில் உள்ள கிருஷ்ணர், பலராமர், ஸ்ரீ லட்சுமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. 9 கலசங்களில் விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜைசெய்யப்பட்டன. மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநரசிம்மருக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், பல வண்ணப் பூக்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து பூரண கும்ப ஆரத்தியுடன்கூடிய மகா தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தின்போது கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஹரிநாம சங்கீர்த்தனமும், நரசிம்ம அவதார மகிமை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply