அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி வழிபாடு

செய்திகள்

உண்ணாமுலையம்மை சமேத ஸ்ரீஅண்ணாமலையார்

சித்ரா பௌர்ணமி வரும் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.29-க்கு தொடங்கி 18-ம் தேதி திங்கள்கிழமை காலை 9.09 மணியோடு நிறைவு பெறுகிறது. கிரிவலம் வருவதற்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்ற நாளாகும்.

பெருவாரியான பக்தர்கள் வருகையை கணக்கில் கொண்டு அண்ணாமலையார், அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக் கடிதங்கள் எதுவும் ஏற்கப்படமாட்டாது.

பக்தர்கள் திருக்கோயிலுக்குள் வர கிழக்கு ராஜகோபுரத்தை பயன்படுத்தவும். தரிசனம் முடிந்து வெளியே செல்ல அம்மணி அம்மன் கோபுர வாயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொது தரிசன வழி, ரூ.20 கட்டண தரிசன வழி மற்றும் ரூ.50 கட்டண தரிசன வழிகள் வழக்கம் போல் இயங்கும்.

தரிசனத்துக்கு பரிந்துரைக் கடிதங்களை எவரும் வழங்க வேண்டாம்.

அதேபோல் பக்தர்கள் எவரும் பரிந்துரைக் கடிதங்களை கொண்டு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பாதுகாப்பு கருதி காவல்துறையின் சோதனைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்கள் நலன் கருதி திருக்கோயில் நிர்வாகத்தால் செய்யப்படும் ஏற்பாடுகளை அனைவரும் ஏற்று ஒத்துழைப்பு தந்து அண்ணாமலையார் அருளைப் பெற வேண்டும் என்றார் தனபால்.

செய்தி: தினமணி

Leave a Reply