திருத்தணி பாதயாத்திரை மார்ச் 15ம்தேதி தொடக்கம்

செய்திகள்

மார்ச் 15-ம் தேதி பவளக்காரத் தெருவில் இருந்து புறப்படும் யாத்திரை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் நிறுவனத்தில் தங்கி, மாலையில் ஆவடிக்குப் புறப்பட்டு இரவு ஆவடி ரெட்டியார் திருமண மண்டபத்தில் தங்குதல். மறுநாள் ஆவடியில் இருந்து புறப்பட்டு வேப்பம்பட்டில் தங்கி, மாலையில் திருவள்ளூரைச் சென்றடைதல். மார்ச் 17-ம் தேதி திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு பட்டரைபெரும்புதூரில் பானக பூஜை முடித்து, இரவு ஸ்டீல் பிளாண்டில் தங்குதல். மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு திருத்தணி சென்றடைதல். 19-ம் தேதி திருத்தணி நகரத்தார் சத்திரத்திலிருந்து காலை 9 மணியளவில் காவடி முத்திரைகளுடன் பால்குடங்கள் மலைக்குப் புறப்படுதல். அங்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை செய்தல். அன்று இரவு மலையில் தங்கரதப் புறப்பாடு. இதற்கான ஏற்பாடுகளை நகரத்தார் திருத்தணி பாதயாத்திரைக்குழு டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Leave a Reply