பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று மாசி உத்திரம் நட்சத்திரத்தை ஒட்டி, பந்தளம் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப ஜயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் ஐயப்பனுக்கு இன்று அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் இன்று இரவு வரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர்.

கேரளத்தில், பிரசித்தி பெற்ற சுவாமியாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்பன் பொதுவாக பங்குனி மாதம் உத்திர நாளில் அவதரித்ததாகக் கருதப்பட்டு, அன்று ஐயப்பனுக்கு ஜன்ம தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

சபரிமலை, ஆரியங்காவு உள்ளிட்ட முக்கிய கோவில்களில் மட்டும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடத்தி ஜன்ம தின வழிபாடு கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும், சபரிமலையில் ஐயப்பனுக்கு ஐயப்பன் அவதார நன்னாளான பங்குனி உத்திரத்தில் பம்பை நதியில் ஆராட்டு விழா விமர்சையாக நடைபெறுவது முக்கியமானது.

இந்த நிலையில் பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள சுவாமி ஐயப்பன் அவதாரத் திருநாள் விழா – மாசி உத்திரம் விழா கோலாகலமாக இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு பந்தளம் ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்களும் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம் முடிந்து, ஐயப்பன் கிருவாபரணங்கள் பந்தளம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. பந்தளம் ஐயப்பனுக்கு சபரிமலை ஐயப்பனின் தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த தரிசனத்தைக் கண்டு களித்தனர்.

பகலில் கலபாபிஷேக வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பகல் மூடாமல் இரவு 9 மணி வரை சபரிமலை ஐயனின் திருவாபரணங்கள் அணிந்த பந்தளம் ஐயப்பனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் பந்தளத்தில் இருந்தது. இரவு பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply