தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

அன்பர்களுக்கு வணக்கம்.

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

இவை தவிர, ஸ்த்ரீ தர்மம் பற்றிப் பெரியவா கூறிய கருத்துகளைப் பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்ற தனி நூலாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், ரா. கணபதி அண்ணாவால் தொகுக்கப்பட்டு இதுவரை தெய்வத்தின் குரல் ஏழு பகுதிகளில் வெளியாகாத சில பகுதிகளும் உண்டு. தற்போது இவை ஒழுங்குபடுத்தப்பட்டு ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை (தெய்வத்தின் குரல் எட்டாம் பகுதி) என்ற நூல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இந்த ஒன்பது நூல்களில் இருந்து ஒருசில கருத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து தினசரி பெரியவா தியானம் என்ற புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மகா பெரியவா கூறியுள்ள 366 கருத்துகள் தரப்பட்டுள்ளன. இவை ஒரு நாளுக்கு ஒரு கருத்து என்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்று இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தினத்துக்கும் இரண்டு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடது பக்கத்தில் மகா பெரியவா படமும், வலது பக்கத்தில் மகா பெரியவா கருத்து ஒன்றும் தரப்பட்டுள்ளன.

மகா பெரியவாளின் மொழிநடை எளிமையாக்கப்பட்டு, தற்காலத் தமிழ் நடையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தற்கால இளைஞர்களும் இந்த நூலை எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்.

அதேநேரத்தில், முதியவர்களும் இந்த நூலை ஆர்வத்துடன் பயன்படுத்துவார்கள் என்பதால் பெரிய எழுத்துரு (14 பாயின்ட்) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நூல் அன்பர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கானது என்பதால் மிகத் தரமான காகிதமும் (100 ஜிஎஸ்எம் மேப்லித்தோ), ஹார்ட் பைண்டிங்-உம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நூல் சில அன்பர்கள் அளித்த நிதி உதவியின் துணை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், ரூபாய் 500 மதிப்புள்ள இந்த நூல் ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது நாங்கள் 2000 பிரதிகள் மட்டுமே அச்சிட்டுள்ளோம். இவற்றில் பொது ஸ்தாபனங்கள், நிதி உதவி செய்த அன்பர்கள் என்ற வகையில் 400 பிரதிகள் எங்களது தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 1600 பிரதிகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

மேலும், நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற நூலையும் வெளியிட்டுள்ளோம். இது தெய்வத்தின் குரலைத் தொகுத்த ரா. கணபதி அண்ணாவைப் பற்றிய சில நினைவுகள் அடங்கியது.

இதுவும் சில அன்பர்கள் அளித்த நிதி உதவியுடன் வெளியிடப்படுகிறது. எனவே, ரூபாய் 250 மதிப்புள்ள இந்த நூல் ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நூல் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிட்டிருக்கிறோம். பொது ஸ்தாபனத் தேவைகளுக்காக 250 பிரதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 750 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குத் தயாராக உள்ளன.

மிக முக்கியமான தகவல்கள்

கொரியர் செலவு விவரம்

  1. தினசரி பெரியவா தியானம் நூலின் விலை ரூபாய் 100/-
    கொரியர் செலவு (சென்னை) ரூபாய் 60/-
    (தமிழ்நாட்டின் இதர பகுதிகள்) ரூபாய் 110/-
    ஆக, மொத்தச் செலவு
    (சென்னை) ரூபாய் 160/-
    (தமிழ்நாட்டின் இதர பகுதிகள்) ரூபாய் 210/-
  2. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நூலின் விலை ரூபாய் 100/-
    கொரியர் செலவு (சென்னை) ரூபாய் 40/-
    தமிழ்நாட்டின் இதர பகுதிகள் ரூபாய் 60/-
    ஆக, மொத்தச் செலவு
    (சென்னை) ரூபாய் 140/-
    (தமிழ்நாட்டின் இதர பகுதிகள்) ரூபாய் 160/-

வெளி மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் கொரியர் செலவு மாறும். எனவே, கொரியரில் அனுப்புவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.

ரெஜிஸ்டர்ட் பார்ஸல் (போஸ்ட் ஆஃபீஸ்) செலவு விவரம்

  1. தினசரி பெரியவா தியானம் நூலின் விலை ரூபாய் 100/-
    தபால் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 70/-
    ஆக, மொத்தச் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 170/-
  2. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நூலின் விலை ரூபாய் 100/-
    தபால் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 50/-
    ஆக, மொத்தச் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 150/-

இரண்டு நூல்களும் வேறு வேறு சைஸ் இருப்பதால் இரண்டையும் சேர்த்து பேக் பண்ண முடியாது. எனவே, இரண்டுக்கும் சேர்த்துத் தபால் செலவு 120 ரூபாய் என்பது தவிர்க்க முடியாதது.

மேட்டூர் ட்ராவல்ஸ் செலவு விவரம் :
20 பிரதிகளுக்கு மேல் வாங்கும் வெளியூர் அன்பர்களுக்கு மேட்டூர் ட்ராவல்ஸ் மூலம் அனுப்பலாம். ஒரு பார்ஸல் செலவு ரூபாய் 300/-
(மேட்டூர் ட்ராவல்ஸ் சர்வீஸ் இருக்கும் ஊர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். இதர ட்ராவல்ஸ் மூலம் அனுப்ப இயலாது.)

நேரில் வருவோருக்கு : நேரில் வந்து வாங்குவோருக்கு இத்தகைய கூடுதல் செலவுகள் இல்லை. அடக்க விலைக்கே வாங்கிக் கொள்ளலாம்.

மிக மிக முக்கியமான குறிப்பு :
அலுவலக நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர் மட்டுமே
பணம் அனுப்பவும் அல்லது நேரில் வரவும்.

<

p class=”has-cyan-bluish-gray-background-color has-background”>தொடர்பு முகவரி
வேத ப்ரகாசனம்
இரண்டாவது மாடி
64, மதுரை சாமி மடம் தெரு
(சொந்தம் ப்ரின்டர்ஸ் & பப்ளிஷர்ஸ் மாடியில்)
(செம்பியம் தீயணைப்பு நிலையம் அருகில்)
பெரம்பூர், சென்னை – 11
வாட்ஸ்அப்: 7550113406 / 9445309852
ஈமெயில்: vedaprakaasanam@gmail.com / purnavani@gmail.com

அன்பர்கள் கவனத்திற்கு,

பெரியவா பக்தர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே இந்த நூல்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். தினசரி பெரியவா தியானம் புத்தகத்தின் எடை சுமார் 1 கிலோ. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நூலின் எடை 300 கிராம். மேலும், தற்போது புக் போஸ்ட் வசதி கிடையாது. இந்த இரு காரணங்களால் தபால் செலவு நிறைய ஆகிறது.

நாங்கள் பலரிடம் பண உதவியைப் பெற்றுக்கொண்டு மிகக் குறைந்த விலையில் நூல்களை வெளியிட்டும் வாசகர்கள் தேவையில்லாமல் அதிகச் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, நாங்கள் பக்தியுடன்தான் இந்த நூல்களை வெளியிட்டிருக்கிறோம் என்றாலும், ஒவ்வொரு பிரதியாக பேக்கிங் பண்ணித் தபாலில் அனுப்புமளவு எங்களிடம் பணியாளர்கள் இல்லை.

இருந்தாலும், நாங்கள் அனுப்புவதற்குத் தயாராகவே இருக்கிறோம். அதேநேரத்தில், எங்கள் சிரமங்களைப் புரிந்துகொண்டு எங்களுடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் பணிவுடன் வேண்டுகிறோம்.

பல அன்பர்கள் ஒருங்கிணைந்து அனைவர் சார்பாகவும் ஓரிருவர் மட்டும் எங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து பிரதிகளைப் பெற்றுக்கொள்வது எங்களுக்கும் வேலை குறைவு. வாசகர்களுக்கும் தபால் செலவு மிச்சம்.
அதேபோல, வெளியூர் அன்பர்கள் பலர் இணைந்து மேட்டூர் ட்ராவல்ஸ் வழியாகப் பிரதிகள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.
ஆன்மிக ஸ்தாபனங்கள் தங்களது உறுப்பினர்கள் சார்பில் 20-30 பிரதிகள் வாங்கிக்கொள்ளலாம்.

பிரதிகள் பலரைச் சென்றடைய வேண்டும். அச்சிட்டுள்ள பிரதிகளும் குறைவு. எனவே, ஒரு குடும்பத்துக்கு ஓரிரு பிரதிகள் மட்டும் போதும். இதர அன்பர்களின் தேவையைக் கருத்தில் கொள்வது நலம்.

முதலில் வருவோருக்கே முன்னுரிமை.
விருப்பம் உள்ள அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
வேதா T. ஶ்ரீதரன்

Leave a Reply