682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அய்யூர் வடக்கு தெருவில் ஸ்ரீ மதுரைவீரன், நைனார் சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர், வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரைவீரன், நொண்டிச்சாமி, ஆண்டிச்சாமி, பட்டவர்சாமி, நைனார்சாமி, அக்காயி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாகவேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு இரண்டு கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வடக்கு தெரு, நைனப்பன் அம்பலம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.