05841-new-vinayakar-temple-in-karur-district.html">விநாயக சதுர்த்தியில் புதிதாக வந்தமர்ந்த ‘மக்கள் விநாயகர்’! Dhinasari Tamil ஆனந்தகுமார்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாப்பனம்பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
வரவனை ஊராட்சி மன்ற தலைவரிடமும், பசுமைக்குடி நிறுவனர் நரேந்திரன் கந்தசாமியிடமும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஒரு விநாயகர் கோயில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, புதியதாக ஒரு கோவில் அமைக்கப்பட்டு இன்று விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட நேற்று சிலை புதியதாக எடுத்துவரப்பட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இது குறித்து பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் நரேந்திரன் கந்தசாமி குறிப்பிடுகையில், இந்த முயற்சியில், கோவிலை கட்ட ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்த பாப்பனம்பட்டியை சேர்ந்த பழனிவேல் TNEB, மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, ஊர் பெரிய தனம் மா செல்வம், மு.வெங்கடாசலபதி, ப.அய்யம்பெருமாள் TNEB, Rtd, P.நர்சிங்க மூர்த்தி Ex கவுன்சிலர், K. ஆறுமுகம், T.பழனிவேல் TNEB. A.கோவிந்தசாமி, நாராயணன், P. மோகன் குமார், மா. செல்வம் ஆசிரியர், Er. P. மாரிமுத்து உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓர் இடத்தில் கோவில் உருவாவது சாதாரணமாக நடந்துவிடாது. ஒரு கோவிலை உருவாக்க இறையருள் அவசியம் தேவை. எந்த சிக்கலுமின்றி இக்கோவில் உருவாகி உள்ளது மகிழ்வை தந்தது – என்று குறிப்பிட்டார்.
விநாயக சதுர்த்தியில் புதிதாக வந்தமர்ந்த ‘மக்கள் விநாயகர்’! News First Appeared in Dhinasari Tamil