682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில் பிரபலமான திருவிழா ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா இன்று வேத மந்திரங்கள் முழங்க காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் ஆக. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.
இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 9 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் – ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.
ஆக. 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பக தோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.