ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்! அதிகாலையே குவிந்த பக்தர்கள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

andal srivilliputhur

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
‘108’ வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாகவும், ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலமாகவும், திருப்பாவை பாடல்கள் அரங்கேறிய புண்ணிய ஸ்தலமாகவும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு பூமாலைகளுடன், திருப்பாவை என்ற பாமாலையும் சூட்டி மகிழ்ந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

கோவிலில் உள்ள குரடு மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள், திருப்பாவை பாடல்களை தங்க இழைகளால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையுடன் எழுந்தருளி, ஸ்ரீரெங்கமன்னார் சுவாமியுடன் காட்சி கொடுத்தார்.

திருமண வயதை அடைந்துள்ள பெண்கள், தங்களுக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று, ஸ்ரீஆண்டாள் கோவிலில் பாவை நோன்பிருந்து அம்பாளை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனை முன்னிட்டும், இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை நேரத்தில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் முழுவதும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும்.

மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை, பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீஆண்டாள் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply