கார்த்திகை தீபம்: பழனி மலையில் ஏற அனுமதி மறுப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

பழனி மலைக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று சனிக்கிழமை 6-ம் நாள் நிகழ்ச்சியாக சாய்ரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாய்ரட்சை பூஜையின் போது மூலவர் சன்னிதியில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக் கோயிலுக்கு மேலே அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

Leave a Reply