கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> தென் தமிழகத்தில், புகழ்பெற்ற, அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையும், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிக்கு, எண்ணெய்க் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும், நாகேஸ்வரர் கரியமாலீஸ்வரர் சுவாமிகளுக்கு, காய்கறிகள்,பழங்கள், மற்றும் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனையும், கற்பூர ஹாரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மகா தீபாராதனை ஆகியவை செய்விக்கப்பட்டன. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவைக் காண, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதியிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், ஆலயம் வருகை தந்து, சுவாமியை தரிசித்தார்கள்.

Leave a Reply