வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

perumal alankaram in madurai

மதுரை: மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு வர சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், பொடி போன்ற அபிஷேத்
திரவிங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதை அடுத்து, லட்சுமி நாராயணனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .
இதே போல, மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர், மதுரை அண்ணா நகர் வைகை விநாயக ஆலயம், ஆகிய கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதை அடுத்து, பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply