ஸ்ரீசோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா

செய்திகள்

இக்கோயில் 13-ம் நூற்றாண்டில் கர்நாடகத்தின் ஹேய்சால மன்னர் வீரசோமேஸ்வரத் தேவரால் கட்டப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் சிதிலமடைந்த இக்கோயிலை சேலம் ஏ.எல்.சி நிர்வாக இயக்குநர் ஏ.அழகரசன் தலைமையிலான இறைப்பணி நற்பணி மன்றத்தார் 7 ஆண்டுகளாக முயற்சித்து சுமார் 2 கோடியில் புதுப்பித்துள்ளனர்.

கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், ராஜகோபுரம் அனைத்தும் கல்ஹார திருப்பணியாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மூலவர் விமானம், அம்பாள் விமானம், சாலாகார விமானம் உள்ளிட்டவை சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் ஏ.அழகரசன், கவுரவத் தலைவர் என்.கே.சரவணன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply