அறந்தாங்கி அருகே திருநாளூர் கிராமத்தில் 54 அடி உயர பொழிஞ்சியம்மன் கோயிலில் வழிபாடு!

செய்திகள்
புதுக்கோட்டை அருகே திருநாளுர் கிராமத்தில் உள்ள பொழிஞ்சியம்மனுக்கு பலநுாறு லிட்டர் பால் அபிஷேகமும் பலநுாறு பெண்கள் விளக்கு வழிபாடும் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் கிராமத்தில் 54 அடி உயரமுள்ள பொழிஞ்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

அறந்தாங்கி அருகே அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திருநாளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் முகப்பில் 54 அடி உயரமுள்ள பொழிஞ்சி அம்மன் சிலையும் 18 அடி உயரமுள்ள கருப்பர் சிலையும் உள்ளது

இக்கோவிலில் நடந்த வழிபாட்டை முன்னிட்டு பொழிஞ்சி அம்மனுக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி அபிஷேக பொடி பால் தயிர் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் உட்பட ஹோம திரவியங்கள் சந்தனம் உட்பட அனைத்துவித சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்து அதனைத் தொடர்ந்து 54 அடி உயரமுள்ள பொழிஞ்சி அம்மனுக்கு மலர் அர்ச்சனையும் அதனைத் தொடர்ந்து கருப்பர் சுவாமிக்கு மலர் அர்ச்சனையும் செய்து பொழிஞ்சி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது

இந்த வழிபாட்டில்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
அபிஷேக அர்ச்சனைகளை அர்ச்சகர் சாமிநாத பிள்ளை செய்தார் ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.

Leave a Reply