கணுவாய் கற்கிமலைக் கோயிலில் தைப் பூசத் தேரோட்டம்

செய்திகள்

புரதானச் சிறப்பு மிக்க இத்தலத்தில் வருடந்தோறும் தைப்பூசத் தேர்திருவிழா நடந்து வருகிறது. இவ்விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆறுமுகக் காவடிகள், பூக் காவடிகள், தீர்த்தக் காவடிகள் செலுத்துக் காவடிகளுடன் பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு, தினமும் திருவீதி உலா நடந்தது.

கடந்த வியாழக்கிழமை ஊர்ப்பிள்ளையார் கோயிலிருந்து மாவிளக்கு ஊர்வலமும்,திருக்கல்யாணமும் நடந்தது. தொடர்ந்து 6 மணியளவில் திருத்தேர் உற்சவம் ஆரம்பமானது. பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளி தாரை, தப்பட்டை, வாணவேடிக்கைகளுடன் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை, கற்கிமலை ஈஸ்வரர் உடனுறை கருணாம்பிகை அம்மனுடன் ரிஷப வாகனத்தில் வலம் வந்தார். சனிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு நடந்தது.

அநுவாவி சுப்பிரமணியர் கோயில், ஜோதிபுரம் திருமுருகன் கோயில்,பிரஸ் காலனி முருகன் கோயில்,வடமதுரை விருந்தீஸ்வரர் கோயில் ஆகியவற்றிலும் தைப்பூசத் திருவிழா சிறப்புற நடந்தது. இவற்றில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.

Leave a Reply