சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தெப்ப உத்சவம்

செய்திகள்

நாகை மாவட்டம், சிக்கலில் உள்ளது அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோயில். இந்தத் தலத்தில் தனி சன்னிதிக் கொண்டு அருள்பாலிப்பவர் அருள்மிகு சிங்காரவேலவர்.

சூரனை வதம் செய்ய, தாய் வேல் நெடுங்கண்ணியிடம் இறைவன் முருகப்பெருமான் சக்திவேல் வாங்கிய தலமாகப் போற்றப்படும் இந்தத் தலம் முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி உலகப் புகழ்ப் பெற்றது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தடைப்பட்டிருந்த இந்தக் கோயிலின் தெப்ப உத்சவ விழா கடந்த ஆண்டு தொடக்கப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான தெப்ப உத்சவ விழா தைப்பூச நாளான வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக சிங்காரவேலவர், வள்ளி தேவசேனா சமேதராக தெப்பத்துக்கு எழுந்தருளியதைத் தொடர்ந்து, வாண வேடிக்கைகள் மற்றும் பக்தி முழக்கங்களுடன் தெப்ப உத்சவம் நடைபெற்றது. விழாவில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=365211

Leave a Reply