புதுப்பொலிவு பெற்றது சர்வ தீர்த்தக் குளம்

செய்திகள்

காஞ்சிபுரத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி காஞ்சிபுரம் நகரை அழகுப்படுத்தும் திட்டத்தில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கினார்.

இந் நிதியில் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், நடைமேடைகள் அமைத்தல் மற்றும் குளங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன.

இவற்றில் ஒன்றாக ரூ.45 லட்சம் செலவில் சர்வதீர்த்தக் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இக் குளம் சீரமைக்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

தற்போது இக் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றி இரும்பு கம்பிகளால் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளுக்கும், குளத்தின் தடுப்புச் சுவருக்கும் இடையில் அலங்கார பூச்செடிகள் நடப்பட்டுள்ளன.

மேலும் குளம் உள்ள பகுதியில் மின்விளக்குகளும் பொருத்தப்பட உள்ளன. இக் குளம் சீரமைக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

64780" target="_blank">https://www.dinamani.com/edition/story.aspx?artid=364780

Leave a Reply