ஸ்ரீவில்லிபுத்தூரில் கைசிக ஏகாதசி கோலாகலம்!

செய்திகள்
srivilliputhur vastram - Dhinasari Tamil

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், குளிர் காலத்தை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கைசிக ஏகாதசியை முன்னிட்டு பட்டு வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார், கருடாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபெரியபெருமாள் சுவாமிகளுக்கு 108 பட்டு வஸ்திரங்கள் சாற்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் அனைவரும் ஸ்ரீபெரியபெருமாள் சன்னதியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விடியவிடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply