ஸ்ரீரங்கம் கோயிலில் தைத் தேரோட்டம்

செய்திகள்

இதையொட்டி புதன்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பாடு செய்து, அதிகாலை 3 .15 மணிக்கு தைத்தேர் மண்டபத்தை அடைந்தார். பின்னர், காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பெ.கி. தியாகராஜன், திருக்கோயில் இணை ஆணையர் சி. ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.

காலை 6 மணிக்கு புறப்பட்ட தேர் அனைத்து வீதிகள் வழியாகச் சென்று, முற்பகல் 11.45 மணியளவில் நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News: https://www.dinamani.com/edition/story.aspx?artid=363658

Leave a Reply