புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன 7ம் திருவிழாவை முன்னிட்டு குருமகா சன்னிதானம் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
ஆத்மநாத சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இந்நிலையில் 7ம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் மாணிக்கவாசகருக்கு சங்காபிஷேகம் செய்து அதனைத் தொடர்ந்து மண்டகப்படி தீபாராதனை நடந்தது இதில் முன்னதாக கோயிலுக்கு வந்த குரு மகா சன்னிதானத்தை நம்பியார்கள் சிவாச்சாரியார்கள் பப்பு சாஸ்திரிகள் பூரண கும்ப மரியாதையோடு வரவேற்றனர்
தொடர்ந்து நடந்த தீபாராதனையில் குரு மகா சன்னிதானம் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார் சுவாமி வெள்ளி இடப வாகணத்தில் குருத்தோலை சப்பரத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானாக காட்சி கொடுத்தார் குருத்தோலை சப்பரம் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் வான வேடிக்கைளுடன் கடந்து வந்தது
வழிபாட்டில் கட்டளை தம்பிரான் வேலப்ப தேசிகர் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பராமச்சாரிய சுவாமிகள் கண்காணிப்பாளர்கள் சூரியனார்கோயில் குருமூர்த்தி கோமுத்திஸ்வரர் கோயில் சண்முகம் ஆத்மநாதசுவாமி கோயில் சுப்ரமணியன் தென்மண்டல மேலாளர் மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்