திருமலையில் செவ்வாய், புதன்கிழமைகளில் சிறப்பு நுழைவு தரிசன நேரம் மாற்றம்

செய்திகள்

புதன்கிழமை திருமலை அன்னமய்யாபவனில் கோயில் நிர்வாக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திருமலையில் அருகிலிருந்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து,அதனையேற்று செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களும் லகு தரிசனம் எனப்படும் அருகிலிருந்து சுவாமியை தரிசிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறப்பு நுழைவு தரிசனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்த நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இனி மேல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரைமட்டுமே வழங்கப்படும் என்றார்.

Leave a Reply