காலையில் செங்குந்தர் சமுதாயம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக சுவாமிக்கு கண்ணன் பட்டர், முருகன் பட்டர் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்தனர். தொடர்ந்து கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரன், அறங்காவலர்குழு தலைவர் பிச்சையா, அறங்காவலர்கள் சண்முகவடிவு, சேதுராமன், செங்குந்தர் சமுதாய ஊர் நாட்டாண்மை சேட் முருகேசன், செயலாளர் திருமுருகன், பொருளாளர் குமரவேல் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 9 நாட்களும் ஒவ்வொரு சமுதாயம் சார்பிலும் சுவாமி அழைப்பு, சப்பர வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் திருநாளான வரும் 20ம் தேதி தேரோட்டமும், 22ம் தேதி புன்னையாபுரம் யாதவர் சமுதாயம் சார்பில் இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.