அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்திகள்

வரும் தை மாதம் சூரியன் கிழக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதைக்குறிக்கும் வகையில் உத்தராயண புணணியகால உற்சவம் தொடங்கியது.

இதற்காக வியாழக்கிழமை அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் காலை 8.3 0 மணிக்கு தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் ரவி, தியாகராஜன், ஆலாசியநாதர் திருக்கொடியேற்றினர்.

அப்போது விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் ஆகியோர் கொடிமரம் அருகே எழுந்தருளினர். கோயில் இணை ஆணையர் பி. தனபால், அறங்காவலர் குழுத் தலைவர் வ. தனுசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10 நாள்களும் சந்திரசேகரர், அம்பாளுடன் 4 மாட வீதிகளில் உலா வருவார். நிறைவு நாளான 15-ம் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

Leave a Reply