வானமாமலை ஜீயர் – பதரி மட சங்கராச்சாரியர்:: இரு மஹான்களின் சந்திப்பு

செய்திகள்

 

அதன் 3 3வது பீடாதிபதியாக விளங்கும் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள் சென்னைக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஸ்ரீமத் ராமானுஜரால் நிர்மாணிக்கப் பெற்றதும், கீர்த்தி வாய்ந்ததுமான ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முதன்மை பெற்று விளங்கக் கூடியவரும், ஸ்ரீ பெரிய ஜீயர் என அழைக்கப் பெறுபவருமான ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்ரீமடத்தின் 30வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீகலியன் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளும் சென்னை விஜயம் மேற்கொண்டார்.

பீடாதிபதிகள் இருவரும் சென்னை, திருவல்லிக்கேணியில் இருக்கும் ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்ரீமடத்தில் சந்தித்து உரையாடினர்.

ஸ்ரீஸ்ரீ ஜீயர் சுவாமிகளே திருவாய் மலர்ந்தருளியபடி கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பினைப்போலே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே பரஸ்பரம் சிஷ்ய ஜனங்களின் மூலம் விசாரித்துக் கொண்டும், அன்பினைப் பகிர்ந்து கொண்டும் இருந்தவர்கள்.

 

கல்யாண குண விசேஷங்களும், பக்தர்களைத் தம் வாத்ஸல்யத்தால் ஈர்த்து கருணை பொழியும் விசேஷ அருட்குணங்களும், ஸம்ஸ்கிருத மொழியாளுமையும், பலப்பல மொழிகளின் அறிதலும் இப்படி பலப்பல ஒற்றுமை குணங்களை கொண்ட இரு மஹான்களும் சந்தித்து உரையாடியது, பக்தர்களுக்குக் கிடைத்த மாபெரும் தவப்பயனும், வரப்பிரசாதமும் ஆகும்.

Leave a Reply