கோணிப்பையோடு சுற்றிய மனிதன்.. நாற்றம் தாங்காமல் ஓடிய மற்றோர்..!

செய்திகள்
e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aeafe0af8be0ae9fe0af81-e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf-e0aeaee0aea9e0aebf.jpg" alt class="wp-image-237810 lazyload ewww_webp_lazy_load" data-sizes="auto" data-eio-rwidth="511" data-eio-rheight="479" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af8be0aea3e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aeafe0af8be0ae9fe0af81-e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf-e0aeaee0aea9e0aebf.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af8be0aea3e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aeafe0af8be0ae9fe0af81-e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf-e0aeaee0aea9e0aebf.jpg.webp 511w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af8be0aea3e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aeafe0af8be0ae9fe0af81-e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf-e0aeaee0aea9e0aebf-1.jpg.webp 300w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af8be0aea3e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aeafe0af8be0ae9fe0af81-e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf-e0aeaee0aea9e0aebf.jpg 511w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae95e0af8be0aea3e0aebfe0aeaae0af8de0aeaae0af88e0aeafe0af8be0ae9fe0af81-e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf-e0aeaee0aea9e0aebf-1.jpg 300w">

– Advertisement –

– Advertisement –

நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்?
எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?

எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று
பரசுராம் சாமியார் முன் வந்து பொருமினான் சீடன் பக்தவசலம்.
“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான் பக்தவசலம்.

பரசுராம் சாமியார் யோசித்தார்.
சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார் பரசுராம் சாமியார்.

ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.

சரி… அப்புறம்?”
நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”
என்று சீடன் பக்தவசலம் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.
ஆனால் நாளாக …..நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.

பக்தவசலம் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

பக்தவசலத்திடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.
சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான் பக்தவசலம்.

“என்ன புரிந்தது?” என்றார் பரசுராம் சாமியார்.

பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.
துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் பரசுராம் சாமியார்

புரியலையே…? உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்” “சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

ஆமாம். மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!
கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?

எனவே, உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார் பரசுராம் சாமியார்..

நாம் கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத்தான்… எல்லாம் நம் மனதில் மறக்க ஸ்ரீ கிருஷ்ண மந்திரமே உன்னத மருந்து. அதை சொல்ல சொல்ல நம் மனம் விரிவடையும், எதிரிகள் நண்பர்கள் ஆவர், வறுமை விலகும்.

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்:-
“மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்……..
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் “. நம் மனதில் என்றும் நினைக்க வேண்டியது பரந்தமான் ஸ்ரீ கிருஷ்ண மந்திரமே

– Advertisement –

Leave a Reply