சிவன் பார்வதிக்கு உரைத்த ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

செய்திகள்
7277 lazyload ewww_webp_lazy_load" data-sizes="auto" data-eio-rwidth="495" data-eio-rheight="294" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae9ae0aebfe0aeb5e0aea9e0af8d-e0aeaae0aebee0aeb0e0af8de0aeb5e0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0af81-e0ae89e0aeb0e0af88e0aea4e0af8de0aea4.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae9ae0aebfe0aeb5e0aea9e0af8d-e0aeaae0aebee0aeb0e0af8de0aeb5e0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0af81-e0ae89e0aeb0e0af88e0aea4e0af8de0aea4.jpg.webp 495w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae9ae0aebfe0aeb5e0aea9e0af8d-e0aeaae0aebee0aeb0e0af8de0aeb5e0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0af81-e0ae89e0aeb0e0af88e0aea4e0af8de0aea4-1.jpg.webp 300w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae9ae0aebfe0aeb5e0aea9e0af8d-e0aeaae0aebee0aeb0e0af8de0aeb5e0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0af81-e0ae89e0aeb0e0af88e0aea4e0af8de0aea4.jpg 495w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae9ae0aebfe0aeb5e0aea9e0af8d-e0aeaae0aebee0aeb0e0af8de0aeb5e0aea4e0aebfe0ae95e0af8de0ae95e0af81-e0ae89e0aeb0e0af88e0aea4e0af8de0aea4-1.jpg 300w">

பரமசிவனார் பார்வதிக்குக்
கூறிய பாடல் ஸ்ரீராமசந்த்ராஷ்டகம்

பரமசிவன், தேவி பராசக்தியிடம் கூறினார், “பரதன் நந்திகிராமத்தில் தங்கியிருந்து, ஸ்ரீராமன் திரும்பவும் வந்து பட்டம் சூடவேண்டும் என்று கருதி என்னை நாள்தோறும் வணங்கினான். அவ்வண்ணமே நிகழ்ந்தது. அந்தச் சபையிலே ஸ்ரீராமனைப் புகழ்ந்து உரை செய்தேன்…

ஸ்ரீஶிவ உவாச

சுக்ரீவமித்ரம் பரமம் பவித்ரம்
சீதாகளத்ரம் நவமேககாத்ரம்
காருண்ய பாத்ரம் ஶதபத்ரநேத்ரம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (1)

சுக்ரீவனின் நண்பரும் மிகத்
தூய்மையானவரும் சீதையின்
நாயகரும் புது மேக நிறத்தினரும்
இரக்கம் நிரம்பியவரும் தாமரை
போன்ற கண்களுடையவருமான
ஸ்ரீராமசந்திரா! உங்களை
வணங்குகிறேன்.

ஸம்ஸாரஸாரம் நிகமப்ரசாரம்
தர்மாவதாரம் ஹ்ருதபூமிபாரம்
ஸதாவிகாரம் ஸுகஸிந்துஸாரம்
ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (2)

உலக வாழ்க்கையைக் கடக்க உதவுபரும் வேதங்களைப் பரப்புபவரும் தர்மத்தின் அவதாரமும் பூமி பாரத்தைத் தீர்ப்பவரும்
எப்போதும் களங்கமற்றவரும்,
மகிழ்ச்சிக் கடல் போன்றவருமான
ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

லக்ஷ்மீவிலாஸம் ஜகதாம் நிவாஸம் லங்காவிநாஶம் புவனப்ரகாஶம்
பூதேவவாஸம் ஶரதிந்துஹாஸம்
ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (3

லக்ஷ்மியை விலாஸமாகக் கொண்டவரும் உலகங்களுக்கு இருப்பிடமானவரும்
இலங்கையை அழித்தவரும் உலகத்துக்கு ஒளியானவரும்வேதியர்களின்
துன்பத்தைப் போக்குபவருமாகிய
ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

மந்தாரமாலம் வசனே ரஸாலம் குணைர்விஶாலம் ஹதஸப்ததாலம்
க்ரவ்யாதகாலம் ஸுரலோகபாலம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (4)

மந்தார மலர்மாலை அணிந்தவரும் இனிமையாகப் பேசுபவரும்
நற்குணம் நிறைந்தவரும் ஏழு
பனைமரங்களை அழித்தவரும்
அசுரர்களுக்கு மரணமாக இருப்பவரும் சொர்க்கத்தின் பாதுகாவலராகவும்
ஆகிய ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

வேதாந்தகானம் ஸகலைஸ்ஸமானம் ஹதாரிமானம் த்ரிதஶப்ரதானம்
கஜேந்த்ரயானம் விகதா வஸாநம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (5)

வேதாந்தத்தின் இசையானவரும் அனைவரையும் சமமாக பாவிப்பவரும்
கர்வத்தை அடக்குபவரும் தேவர்களுக்கு முதன்மையானவரும் யானை வாகனம் உடையவரும் அனைவர் மனத்திலும் இருப்பவருமான ஸ்ரீராமசந்திரா!
உங்களை வணங்குகிறேன்.

ஶ்யாமாபிராமம் நயனாபிராமம்
குணாபிராமம் வசனாபிராமம்
விஶ்வப்ரணாமம் க்ருதபக்தகாமம் ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (6)

கருநிறங்கொண்டு கவர்பவரும்
அழகிய விழிகளால் கவர்பவரும்
நற்குணத்தால் கவர்பவரும்
நற்சொற்களால் கவர்பவரும்
உலகத்தினரால் வணங்கப்படுபவரும் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்பவருமான ஸ்ரீராமசந்திரா!
உங்களை வணங்குகிறேன்.

லீலாஶரீரம் ரணரங்கதீரம்
விஶ்வைகஸாரம் ரகுவம்ஶஹாரம்
கம்பீரநாதம் ஜிதஸர்வவாதம்
ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (7)

விளையாட்டாக அவதரிப்பவரும் போர்க்களத்தில் தீரமுடையவரும்
உலகத்தின் சாரமானவரும்
இரகுவம்சத்தின் ஆரம் போன்றவரும்
கம்பீரமான குரலுடையவரும்
வாதங்களில் வெல்பவருமான
ஸ்ரீராமசந்திரா! உங்களை
வணங்குகிறேன்.

கலேக்ருதாந்தம் ஸ்வஜனே விநீதம்
ஸாமோப கீதம் மனஸா ப்ரதீதம்
ராகேண கீதம் வசனாததீதம்
ஸ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி. (8)

கொடியவர்களுக்குக் கடுமையானவரும் தம்மைச் சார்ந்தவர்களுக்கு
இனிமையானவரும் ஸாம வேதத்தால் இசைக்கப்படுபவரும் மனத்தால் தொழப்படுபவரும் பல பாடல்களால் வணங்கப்படுபவரும் தம் நாமத்தைச் சொல்பவர்களுக்கு அனைத்தையும் தருபவருமான ஸ்ரீராமசந்திரா!
உங்களை வணங்குகிறேன்.

ஸ்ரீராமசந்த்ரஸ்ய வராஷ்டகம்
த்வாம் மயேரிதம் தேவி மனோஹரம்
படந்தி ஶ்ருண்வந்தி க்ருணந்தி பக்த்யா தே ஸ்வீயகாமாந்ப்ரலபந்தி நித்யம் (9)

தேவி! ஸ்ரீராமசந்திரன் புகழ்பாடும்
அஷ்டகத்தை உன் முன்பு நான்
உரைத்தேன். இதனை உரைப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் அவர்களது விருப்பங்கள் நிறைவேறும்.

Leave a Reply