அழிஞ்சு போகுற மை… தாக்குப் பிடிக்காத ரசீது! என்ன கோல்மாலோ?!: பக்தர்கள் புகார்!

செய்திகள்
thiruvannamalai teckets for neikuadam
thiruvannamalai teckets for neikuadam

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயிலில் தீப திருவிழாவை முன்னிட்டு கொடுத்த கட்டண ரசீது குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்துக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. காணிக்கை வசூல் செய்வதற்காக கோவில் வளாகத்தில் இரண்டு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கவுண்டர்களில் நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250ம், அரை கிலோவிற்கு ரூ.150ம், கால் கிலோவிற்கு ரூ.80ம் வசூலிக்கப்படுகிறது.

பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்துக்கு ஆலய நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப ‘மை’ பெற்றுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், கட்டணம் பெற்றுக் கொண்டு இதற்காக வழங்கப்படும் ரசீது, விரைவிலேயே எழுத்து அழிந்து விடும் நிலையில், ஒப்புக்கு ஒரு சீட்டாக உள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் பக்தர்கள்.

மை விரைவில் அழிந்துவிடும் தன்மையில் மெஷினில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்கப்படுவது தான் பிரச்னைக்கு உரியதாக இப்போது உள்ளது. நெய் காணிக்கைக்கு வழங்கப்படும் ரசீதுகளில் மை உடனடியாக அழிந்து, சீரியல் எண், கட்டணத்தொகை, எத்தனை அளவு நெய் என்பது போன்ற தகவல்கள் இதுவும் சில நாட்களுக்கு கூட அந்த அரசியலில் தாக்குப் பிடிக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஓரிரு நாட்களுக்குக் கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இருக்கும் இந்த ரசீதுகளை பக்தர்கள் இரண்டு மாதங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருந்து, மார்கழி மாதம் வருகின்ற ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகுதான் காட்டி, தீப ‘மை’ பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்…

இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மூலம் வழங்கப்படும் ரசீது ஒரு வாரத்துக்குள் மை அழிந்துவிடும் தன்மை கொண்டது. மிஷின் மூலம் பஸ் டிக்கெட் கிழித்து கொடுப்பதுபோல் கொடுக்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பிறகு இந்த ரசீதை பெற்று கொள்கிறார்கள். அவர்கள் இந்த ரசீதைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகும். மழையில் நனைந்தாலும், இந்த மை அழிந்துவிடும், அந்த ரசீதை மடித்தாலும் மை ஒட்டிக் கொள்கிறது. எனவே அழியும் தன்மை இல்லாதவாறு நீண்டநாள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய ரசீதுகளை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும் என்றனர்.

ஆலயங்களில் முன்பெல்லாம் சிறப்பு தரிசனத்துக்கு அல்லது கட்டண தரிசனத்துக்கு என்று அச்சடித்து வைத்த டிக்கெட்டுகளை வழங்குவார்கள். ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் பஸ்களில் கொடுக்கும் டிக்கெட்டுகளை போல் மிஷினில் பிரிண்ட் செய்து கிழித்துக் கொடுக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான கோவில்களில் வரிசை எண்களும் நேரமும் எதுவும் இருப்பதில்லை. இதனால் அறநிலையத்துறை கோவில்களில் ஏதோ கோல்மால் நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

ஆண்டவன் சன்னதியில் அவநம்பிக்கையாளர்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்றுதான் அறநிலையத்துறை குறித்து பக்தர்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply