அடுத்தவரை துன்புறுத்தி சுகம்..? ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
abinav vidhya theerthar
abinav vidhya theerthar

வித்யாரண்யர் ஓரிடத்தில் சொல்கிறார்: இதோ பார் ஈச்வர சிருஷ்டி. ஜீவ சிருஷ்டி என்று இரண்டு உள்ளன. ஈச்வர சிருஷ்டி நமக்கு அவ்வளவு துயரத்தைத் தருவதில்லை.

இந்த ஜீவ சிருஷ்டிதான் பெரிய தீவினைப் பயனாக ஆகிறது” என்று உரைத்தார் அவர். அப்படியென்றால் என்ன? ஒருவன் தன் மகன் காசிக்குப் போயிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் அங்கே இருக்கிறானா, இறந்துவிட்டானா என்று தெரியாது. யாரோ ஒருவர் வந்து, “ அவன் இறந்துவிட்டான்” என்று சொன்னார். உடனே தந்தை சிரார்த்தம் செய்யத் துவங்கிவிட்டான். பின் என்ன செய்வான்? சிரார்த்தம் செய் என்று சாஸ்திரம் சொல்கிறதே! அதற்குப்பின் மற்றொருவர் வந்து சொன்னார்,

இல்லையப்பா, உன் மகனை நான் காசியில் பார்த்தேன்” என்று. இதைக்கேட்டவுடன்; “ஐயையோ, நான் சிரார்த்தம் பண்ணியதெல்லாம் வீணாகிவிட்டதே! இப்போது என்ன செய்வது?” என்று கூறிப் பின்னர் மகிழ்வுறுகிறான்.

அதனால், மகனுடைய இறப்போ, இருப்போ அவனது இன்பதுன்பங்களுக்குக் காரணமில்லை. அந்த இறப்பு, இருப்பு, சம்பந்தப்பட்ட அறிவு வந்ததே, அதுதான் இது எல்லாவற்றிற்கும் காரணம். ஆகவே அதுதான் இங்கு இருக்கக்கூடிய ஜீவ சிருஷ்டி. அவன் எப்படி இருக்கிறான் என்பதை ஈச்வர ச்ருஷ்டி குறிக்கிறது.

மற்றொருவனுடைய கைக்கடிகாரத்தைவிட நம் கடிகாரம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே சமயம் மற்றொருவனுடைய கடிகாரம் நம்முடையதைவிட நன்றாக இருக்கும்போது நம் மனதில் ஆதங்கமும் வருத்தமும் ஏற்படுகிறது. மொத்தத்தில் இன்ப துன்பங்கள் பற்றுதலினால் மட்டும் தான் இருக்கின்றன.

ஆகவே வேற்றுமை பாராட்டி மற்றவனுடைய சுகத்தை நாசம் செய்து நாம் சுகத்தை அனுபவிக்கவேண்டுமா? வேண்டாம் ; அவனும் பரம் பொருளின் வடிவம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply