பட்டைத் தீட்டிய வைரம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
abinavavidhyadhirthar-3
abinavavidhyadhirthar-3

எவர்கள் அறிவுக் கடலாகி விளங்கும் மகான்களின் காட்சி பெறவில்லையோ, அவர்களின் உபதேசங்களைக் கேட்கவில்லையோ, அவர்களின் சொற்களின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லையோ அவர்கள் பிறவியிலிருந்தே குருடர்கள்; பிறவியிலிருந்தே செவிடர்கள்; பிறவியிலிருந்தே ஊமைகள் என்பது கருத்து.

நாம் இம்மாதிரி குருடனாகவோ ஊமையாகவோ செவிடனாகவோ இருக்கக் கூடாது. நாம் அறிவுக் கடலாய் விளங்கும் மகான்களைப் பூஜித்து அறிவு பெற வேண்டும்.

சுரங்கத்திலிருந்து வைரத்தை எடுத்தால் அது வைரமாயிருந்தாலும் பளபளப்புடனிருக்காது. அதைச் சாணை தீட்டக் கொடுத்தால் மிகவும் பிரகாசமடையும்.

சாமான்ய கல்லைச் சாணை தீட்டக்கொடுத்தால் தேய்ந்துவிடும். மேலும் வைரக் கல் இயற்கையிலேயே கிடைத்தாலும் அதைத் தீட்டிக் கூர்மையாக்காதவரை கண்ணாடியை அறுக்க அதனால் முடியாது.

அதேபோல் மனிதனும் இயற்கையாகவே ஓரளவிற்கு அறிவு உள்ளவன். சாஸ்திரங்கள் மற்றும் குருவின் உபதேசத்தால் விசேஷமான அறிவு ஏற்படும். இது சாணைக்குக் கொடுக்கப்பட்ட வைரத்தைப் போல் பிரகாசிக்கும்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply