கர்வம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
sringeri sri bharathi theertha swamigal

மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்யம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ளச்செய்கிறது.

ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவனை மிகவும் தொந்தரவு செய்யது தவறுகளிலும் ஈடுபட வைக்கிறது.

தன்னை யாரும் எதிர்க்க முடியாது என்று அவன் தவராக நினைக்கிரான். ஆனால் அவனுடைய கெட்ட கர்மாவினால் அவன் கஷ்டங்களை அனுபவிப்பது நிச்சயம். அகம்பாவத்தை கைவிட்டாலே இதை தவிர்க்க முடியும்.

மனிதன் பணம், யௌவனம், பாண்டித்யம் காரணமாக கர்வப்படக்கூடாது. எல்லாவற்றையும் காலம் எடுத்து சென்றுவிடும். அவை சாஸ்வதமல்ல. 

பகவத்பாதர் போன்ற மஹரிஷிகள் எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும் துளி கர்வம் கூட இல்லாதவர்கள். அதனால் ஜனங்கள் அவர்களை மஹா புருஷர்கள் என்று வர்ணித்து இருக்கிறார்கள்.

ஆகவே எக்காரணம் கொண்டும் அகம்பாவம் கொள்ளாமல் மனிதன் எளிமையுடன் வாழ வேண்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரை

Leave a Reply