பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?
இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை உன்னுடைய பாதார விந்தத்திலே வைத்துவிடுகிறேன். எனக்கு அனுக்ரஹம் செய்” என்று வேண்டினார்.
மனதை பகவானுடைய பாதாரவிந்தத்திலே வைப்பது என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மனம் என்பது கைக்கு கிடைக்கக்கூடிய பொருளா? அப்படி கிடைக்கக்கூடியதாக இருந்தால் அதை சுலபமாக எடுத்து வைத்து விடலாமே?
ஆனால், அது கைக்குக் கிடைக்காதே! பின்பு எப்படி மனதை பகவானின் பாதாரவிந்தத்திலே வைத்து விடுவதாகச் சொல்கிறார் என்றால், “பகவானே! எப்பொழுதும் உன்னுடைய பாதாரவிந்தத்தையே நான் நினைக்கும்படி எனக்கு அனுக்ரஹம் செய்” என்று அதற்கு அர்த்தம்.