இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கு விழா! திருவரங்கம் திரு அத்யயன உத்ஸவம் தொடக்கம்!
பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் பெரியவிழாவாம் அத்யயன உத்ஸவம் என்கிற திருமொழித் திருநாள், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, திருமங்கை ஆழ்வார் இயற்றிய திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்கப்பட்டது.
மாலை 7 மணி அளவில் அரையர்களால் தாளம் இசைக்கப் பெற்று திருநெடுந்தாண்டகம் சேவிக்கப் பட்டது.
திருமங்கை மன்னன் அருளிச் செய்த “மின்னுருவாய்” பாசுரம் அபிநயம் வியாக்யானம் தம்பிரான்படி வியாக்யானம் சந்தனு மண்டபத்தில் சேவிக்கப் பட்டது.
நாளை முதல் திருமொழித் திருநாள் என்கிற பகல் பத்து உத்ஸவம் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் 9:30 வரை நம்பெருமாள் நடையழகு கண்டருளி படியேற்றம் நடைபெறும்.