விதித்த தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
bharathi theerthar
bharathi theerthar

நலன்களை பெறுவதற்கு மனிதன் சாஸ்திரங்களில் கூறப்பட்ட தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். முழுமையாக அனுசரிக்க முடியாவிட்டால் கூட முடிந்த அளவுக்கு அதை பின்பற்றவேண்டும்.

தர்மத்தை சிறிதளவு அனுஷ்டிப்பது கூட ஒருவனை பெரும் பயத்திலிருந்து ரக்ஷிக்கிறது.

கீதையில் பகவான் சொல்கிறார்:

பக்தியோடு பகவானைப் பூஜிப்பது முக்கியமானது. அதாவது பக்தியுடன் எனக்கு இலை, புஷ்பம், பழம் அல்லது தண்ணீரையும் எவனொருவன் சமர்ப்பித்தாலும் அதை எனது பூஜா சாமக்ரியை போல் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பகவான் சொல்கிறார்.

ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை அனுஷ்டித்தால் போதும், தனக்கு குறிப்பிடப்படாத வேறெந்த தர்மத்தையும் கடைப்பிடிக்க அவசியம் இல்லை. அப்படிப்பட்டதை அனுஷ்டித்தாலும் அது பயனற்றது.

உதாரணமாக எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவித கேள்வித்தாள் பெறுவான். பத்தாம் வகுப்பு மாணவனுக்கு வேறு ஒரு வித கேள்வித்தாள் கொடுக்கப்படும். இவ்விரு மாணவர்களும் தங்களில் மற்றவனுடைய கேள்விகளுக்கு எவ்வளவு சிரமப்பட்டு விடை எழுதினாலும் அவர்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்காது.

எவ்வளவு குறைபாடுகளுடனும் கூட தன் சொந்த தர்மத்தை அனுஷ்டிப்பது மற்றவனை சார்ந்த தர்மத்தை நன்றாக கடைப்பிடிப்பதையும் விட சிறந்தது என்று பகவான் சொல்கிறார்.

மற்றொரு இடத்தில் கிருஷ்ண பகவான், தன் தர்மத்தில் ஸ்ரத்தையுடன் ஈடுபடுபவனுக்கு குறைபாடற்ற நிலை ஏற்படுகிறது என்று இதற்கு அர்த்தம்.

பகவானின் இந்த உபதேசங்களை எப்போதும் மனதில் கொண்டு எல்லோரும் அவரவர் தர்மத்தை அதிகபக்ஷம் கூடியமட்டும் அனுஷ்டித்து நலன்களை பெறுவார்களாக

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply