அறப்பளீஸ்வர சதகம்: முப்பத்திரண்டு அறங்கள்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
பிள்ளைகள் அருந்தி டும்பால்,
பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்
பெண்போகம், நாவிதன், வணான்,
மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு
வாயின்உறை, பிணம்அ டக்கல்,
வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்
வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,
சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
செய்தல், முன் னூலின் மனம்,
திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,
தேவரா லாயம்,அ வுடதம்;
அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்
அன்னைசெயல்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே

அருமை தேவனே!, மகவு பெறுதற்கு
வீடு விடுதல், மகவு பெறுதற்கு வேண்டியவற்றை உதவுதல், காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள்
அருந்திடும் அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல், சொலற்கரிய சத்திரம் கட்டல், (துறவிகள் இருக்கும்) மடம் அமைத்தல், பசுக்களின் தினவு நீக்கும் கல்நடுதல், பெண்களுக்கு இன்பம் அளித்தல், அம்பட்டனுக்கு உதவுதல், வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், நீர் வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் கொடுத்தல், பசுக்களுக்குத் தீனி, (ஆதரவு அற்ற) பிணத்தை அடக்கம் செய்தல், குளம் வெட்டுதல், இறக்கும் உயிரைக் காத்தல், தின்பண்டம் அளித்தல், வெற்றிலைபாக்குக் கொடுத்தல்,
சுண்ணாம்பு உதவுதல், சிறையில்
அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், பிறர் துயரைப் போக்குதல், சோலை வைத்தல் பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், இரப்போர்க்கு ஈதல், அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு அளித்தல், திருக்கோயில் கட்டுதல், மருந்து
கொடுத்தல், பாடம் படிப்போர்க்கு
உணவு அளித்தல், (ஆகிய) முப்பத்திரண்டு அறங்களும், முற்காலத்தில் உமையம்மையார் காஞ்சியிற் செய்தவை ஆகும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply