e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0aeb1e0af88e0aeafe0af8b-1.jpg 1200w">மறையோர் சிறப்பு
ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி ஒன்றுதப் பாது புரிவார்; உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம் ஒருமூன்றி னுக்கும் மறவா தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும் அதிதிபூ சைகள்பண் ணுவார்; யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம் இன்றியே செய்து வருவார்; பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே பிழையா திருக்கும் மறையோர் பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும் பேசுதற் கரித ரிதுகாண்! ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும் அண்ணலே! அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே!
ஆத்திமாலை தரித்த நீண்ட சடையை உடைய தூயவனே!, என்னைக் காக்கும் பெரியோனே!, அருமை தேவனே!, மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது செல்லும் மறையவர்கள், (தமக்கு உரிய) ஆறு தொழில்களையும் விடமாட்டார், தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமற் செய்வார், வைகறையிலே போய் நீராடுவார், முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார், எப்போதும் விருந்தினரை ஓம்புவார், வேள்வி முதலிய தொழில்களை மந்திரமும் செயலும் குறைவு இல்லாமற் செய்துவருவார், பேராசை கொள்ளமாட்டார், (இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவருடைய மேன்மை யாவராலும் கூற இயலாதது! இயலாதது!
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related