அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

உணவில் விலக்கு

கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்
காராக் கறந்த வெண்பால்
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
தென்னை வெல்லம் லாவகம்,
சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு
சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,
எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,
இலகுசுட ரில்லா தவூண்,
இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா
எனப்பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்
தூயவனே!, அருமை தேவனே!,
கைவிலைக்கு வாங்கும் பாலும், ஆட்டுப்பாலும், வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு,
செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம்,
மலாவகம் பிண்ணாக்கும், சிறப்பில்லாத
வெள்ளைப் பூண்டு, (சிறப்பில்லாத) வெங்காயமும், பெருங்காயத்துடன், சிறப்பில்லாத வெள்ளைக் கத்தரிக்காயும்,
குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட
பொருளும், சூரியன் ஒளியும்,
விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை,
என்று பழைமையான நூல்கள் கூறும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply