e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: போகும் வழிக்கு நல்சகுனம்! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/04/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaae0af8be0ae95e0af81e0aeae-1.jpg 1200w">சகுனம் – 2
நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை நாவிசிக் சிலியோந் திதான் நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி நாடரிய சுரபி மறையோர் வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின் வழிப்பயணம் ஆகை நன்றாம்; மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல், வாய்ச்சொல்வா வாவென் றிடல், தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு தப்பட்டை ஒலிவல் வேட்டு தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி தனக்கேக நன்மை யென்பர்! அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய அண்ணலே! அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே!
சிவந்த கதிர்களையுடைய காலையிள ஞாயிறு போன்ற பெரியோனே!, அருமை தேவனே!, நரியும் மயிலும் பச்சைக்கிளியும் கோழியும் கொக்கும் காக்கையும் கத்தூரி மிருகமும் சிச்சிலிப் பறவையும் ஓணானும், வல்லூறும் விரைந்து கத்தும் செம்போத்தும் எருமையும் சிந்தித்தற்கு அருமையான பசுவும் அந்தணரும், வரிப்புலியும் முயலும் (ஆகிய) இவை யாவும் வலமாக வந்தால் வழிச்செலவு நன்மைதரும், மேலும், இவையல்லாமலும், குதிரை கனைத்தலும், வாய்ச்சொல்லாக வாவா என்று (காதிற் படும்படி) கூறுதலும், கொடுக்கின்ற சங்கு ஒலித்தலும், கொம்பும் கிடு முடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும், இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related