பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

 

தனியன்கள்

திருகோட்டியூர் நம்பி அருளிச் செய்தது

கலயாமி கலித்வம்ஸம் கவிம்லோக திவாகரம்|

யஸ்யகோபி: ப்ரகாசாபி: ஆவித்யம் நிஹதம்தம:||

 

எம்பெருமானார் அருளிச் செய்தது

இருவிகற்ப நேரிசை வெண்பா

வாழிபரகாலன் வாழி கலிகன்றி

வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்

தூயோன் சுடர்மான வேல்

 

ஆழ்வான் அருளிச் செய்தது

கட்டளைக் கலித்துறை

நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி

நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள்

அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்

பஞ்சுக்கனலின்பொறி பரகாலன் பனுவல்களே!

 

எம்பார் அருளிச் செய்தது

ஒருவிகற்ப நேரிசை வெண்பா

எங்கள் கதியே இராமாநுச முனியே

சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ்

மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்

தங்கு மனம் நீ எனக்குத் தா!

 

(மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று

கோலிப்பதி விருந்த கொற்றவனே – வேலை

அணைத்தருளும் கையால் அடியேன் வினையை

துணித்தருள வேணும் துணிந்து)

– இந்த தனியன் அதிகம் வழக்கில் இல்லை. இது, மணவாள மாமுனிகள் அல்லது சோமாசியாண்டான் அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

 

Leave a Reply