ரவி சாரங்கன் எ லட்சுமி நரசிம்மன்
ராசி பலன்
ரோட்டில் போகும் போது டேய் முட்டாள் என குரல் கேட்டால் அனைவரும் திரும்பி பார்ப்போம் இயல்பாகவே
அது போல தான் இந்த ராசி பலன்களும் அஷ்டமத்தில் ராகு பயங்கரமாக படுத்தும் சனி அர்த்தாஷ்டம சனி ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும் என எழுதினால் நிறைய பேர் ஆம் நான் ரொம்பவே கஷ்ட பட்டுட்டேன் என்பர்.
ஒருவருக்கு துன்பம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கு உண்மையில் ராகுவும் சனியும் பழியை சுமந்து கொண்டு காப்பாற்றி இருக்கும் பெரும் பாதிப்பில் இருந்து.
8ல் ராகு இருப்பதாலேயே தோஷம், களத்திரகாரகன் என்று பொதுவாக சொல்ல ப்படும் சுக்ரன் நீசம் (காஞ்சி மஹா பெரியவா கிரஹங்களை நீசம் கெட்ட கிரஹம் என சொல்ல கூடாது என்கிறார் ) இவை மண வாழ்க்கையை பாதிக்கும் என்பதும் நடைமுறையில் ஒத்துவராததை பல ஜாதகங்களை அலசி பார்த்து தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு ஜோதிடருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும் அது அவரவர் கற்றுக்கொண்ட வழி. அது தவறு என சொல்லக்கூடாது என்பது அடியேன் அபிப்ராயம்.
அடியேன் பொதுவாக ஒரு ஜாதகத்தை எடுத்து கொண்டால் 1மணி நேரம் பலன் சொல்கிறேன் அதில் 3 0 நிமிடம் கடந்தகாலங்கள் பற்றி சொல்கிறேன். அடியேன் நோக்கம் ஒரு கிரஹம் அந்த ஜாதகருக்கு எந்த வேலையை செய்கிறது என்பதை கணிப்பது. கடந்த காலங்கள் 80-90% சரியாக இருந்தால் அடுத்த எதிர்காலம் சரியாக இருக்கும் என்பதை ஃபீட்பேக் வைத்து அறிகிறேன். அதில் அடியேன் கற்று கொண்டது தோஷம் என்று ஒன்றில்லை கிரஹங்களில் சுபம் அசுபம் என்று ஒன்றில்லை. சுப கிரஹமும் கெடுதல் செய்கிறது அசுப கிரஹம் எனப்படும் கிரஹங்களும் நன்மை செய்கின்றன.
பொதுவாக சொல்லப்படும் தந்தைகாரன் சூரியன் தந்தைக்கான வேலையை எல்லோர் ஜாதகத்திலும் செய்வதில்லை பிள்ளைக்கான அல்லது மனைவிக்கான வேலையை செய்யலாம். ஒவ்வொரு கிரஹமும் இப்படியே. திருமணத்தை சுக்ரன் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை ராகுவும் செய்யலாம்.
ராசிபலன்கள் பொதுவானது அதை நமக்கு பொருத்தி பார்ப்பது ஒரு அல்ப திருப்தியை மட்டும் தரும் என்பது அடியேன் அபிப்ராயம்.